பழம்பெரும் பாடகர் ஓஸி ஆஸ்போர்ன் காலமானார்

முன்னணி பாடகர் ஜான் மைக்கேல் ஓஸி ஆஸ்போர்ன் 76 வயதில் காலமானார்
சென்னை,
பிரிட்டிஷ் ஹெவி மெட்டல் இசைக்குழுவான பிளாக் சப்பாத்தின் முன்னணி பாடகர் ஜான் மைக்கேல் ஓஸி ஆஸ்போர்ன் 76 வயதில் காலமானார்.
"பிரின்ஸ் ஆப் டார்க்னஸ்" என்று மக்களால் அழைக்கப்பட்ட ஜான் மைக்கேல் அவரது வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மறைவுக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
பாடகரின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள பதிவில், ''எங்கள் அன்பான ஓஸி ஆஸ்போர்ன் இன்று காலை காலமானார் என்பதை மிகுந்த சோகத்துடன் தெரிவித்துக்கிறோம். இந்த நேரத்தில் எங்களுக்கு ஆதரவாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






