

தமிழ் தாண்டி இந்தி சினிமாவிலும் ஜொலித்து வரும் கங்கனா ரணாவத், தற்போது எம்.பி.யாகவும் பதவி வகித்து வருகிறார். தமிழில் கடைசியாக 'சந்திரமுகி-2' படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரணாவத் முன்னாள் காதலனால் தான் பட்ட வேதனைகள் குறித்து பகிர்ந்தார்.
"எனது 26-வயதில் நான் காதலில் இருந்தேன். அப்போது எனது காதலர் என்னை பற்றி தவறான செய்திகளை பரப்பினார். நான் ரத்தம் குடிப்பேன் என்றும், பிளாக் மேஜிக் (சூனியம்) செய்வேன் என்றும் விமர்சித்தார். என்னை சூனியக்காரி என்று சொல்லியும் காயப்படுத்தினார்.
அந்த கடினமான நேரத்தில் நான் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி, 'குயின்' படத்தின் மூலம் 'ஹிட்' கொடுத்தேன். அதெல்லாம் வாழ்வின் கடினமான காலகட்டம். தற்போது அந்த பிரச்சினை இல்லை". என்று கங்கனா ரணாவத் குறிப்பிட்டார்.
கங்கனா ரணாவத் தற்போது மத்திய மந்திரி சிராக் பஸ்வானுடன் காதலில் இருப்பதாக 'கிசுகிசு'க்கப்பட்டு வருகிறார்.