'ரோமியோ அண்ட் ஜூலியட்' பட நடிகை ஒலிவியா காலமானார்

'ரோமியோ அண்ட் ஜூலியட்' படத்தில் ஜூலியட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஒலிவியா.
மும்பை,
பிரபல ஹாலிவுட் நடிகை ஒலிவியா ஹஸ்ஸி(73). இவர் தனது 15-வது வயதில், கடந்த 1968-ம் ஆண்டு பிராங்கோ ஜெபிரெல்லி இயக்கத்தில் வெளியான 'ரோமியோ அண்ட் ஜூலியட்' படத்தில் ஜூலியட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இப்படத்திற்காக ஒலிவியா சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது வென்றார். இந்த சூழலில், நடிகை ஒலிவியா உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜூலியட்டாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஒலிவியாவின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹஸ்ஸிக்கு கடந்த 2008-ம் ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story