

ஜியோ பேபி நடிகர் ரோஷன் மேத்யூவை நாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஹியூமன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற மலையாள இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்முட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்’ என்கிற படத்தை இயக்கினார். தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளைப் பேசிய இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மம்முட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சில விருதுகளும் கிடைத்தன
இந்த நிலையில், ஜியோ பேபி நடிகர் ரோஷன் மேத்யூவை நாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஹியூமன்’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்படம் 2027-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.