’செல்லமே’ இயக்குநரின் 'பிரேக்பாஸ்ட்': கதாநாயகியாக அறிமுகமாகும் ரோஸ்மின்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

மாடலிங் துறையிலிருந்து வந்து இப்படத்தின் மூலம் ரோஸ்மின் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
’செல்லமே’ இயக்குநரின் 'பிரேக்பாஸ்ட்':  கதாநாயகியாக அறிமுகமாகும் ரோஸ்மின்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Published on

சென்னை,

விஷால் நடித்த 'செல்லமே' மற்றும் தமன்னா நடித்த 'ஆனந்த தாண்டவம்' ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராகக் களம் இறங்கியுள்ள திரைப்படம் 'பிரேக்பாஸ்ட்'.

மாடலிங் துறையிலிருந்து வந்து இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் ரோஸ்மின், தனது அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், "காந்தி கிருஷ்ணா சார் படங்களில் ரீமா சென், தமன்னா போன்ற நாயகிகளின் கதாபாத்திரங்கள் மிகவும் வலிமையாக இருக்கும். அவர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது நான் மிகுந்த உற்சாகமடைந்தேன். இப்படத்தில் எனக்கு எமோஷனல் மற்றும் அழகான காதல் காட்சிகள் நிறைந்த ஒரு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இது ரசிகர்களிடையே நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்" என்றார்.

Also Read
விவாகரத்து சர்ச்சையில் சர்வானந்த்?... இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் நீக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி
’செல்லமே’ இயக்குநரின் 'பிரேக்பாஸ்ட்':  கதாநாயகியாக அறிமுகமாகும் ரோஸ்மின்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இப்படத்தில் ரானவ், ரோஸ்மின், கிருத்திக் மோகன் மற்றும் அமிதா ரங்கநாத் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மூத்த நடிகைகள் கஸ்தூரி மற்றும் அர்ச்சனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வைரமுத்து மற்றும் விவேக் பாடல்களை எழுதியுள்ளனர். கிரிஜா வரதராஜ் தயாரித்துள்ள இப்படம், வரும் 24-ம் தேதி (2026) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com