நாணயம், நேர்மை, கடின உழைப்பு, தெய்வப் பக்தி.. அதுதான் ஆர்.பி.சவுத்ரி - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

என்னை வைத்து தனது 100வது படத்தை தயாரிக்க திட்டமிட்டார் என ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நாணயம், நேர்மை, கடின உழைப்பு, தெய்வப் பக்தி.. அதுதான் ஆர்.பி.சவுத்ரி - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி, ராஜஸ்தானில் நடந்த கார் விபத்தில் நேற்று முன்தினம் பலியானார். அவருக்கு வயது 72. இதற்கிடையில் அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள இல்லத்துக்கு விமானம் மூலம் நேற்று கொண்டுவரப்பட்டது. ஆர்.பி.சவுத்ரியின் உடலை பார்த்து அவரது மனைவியும், மகன்கள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோரும் கண்ணீர்விட்டு அழுதனர்.

ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு ஜீவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரி வித்தார். விஜய் நடித்த 'பூவே உனக்காக', 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'ஷாஜ கான்', 'திருப்பாச்சி', 'ஜில்லா' போன்ற படங்களை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன.

அதேபோல முன்னணி நடிகர்களான சிவகுமார், மம்முட்டி, ராதாரவி, பார்த்திபன், விக்ரம். சூர்யா, தனுஷ், விஷால், கார்த்தி, சிபிராஜ், உதயா, நகுல், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், ஆர்.வி.உதயகுமார். ராஜகுமாரன், பேரரசு, ராஜூமுருகன், நாஞ்சில் பி.சி.அன் பழகன், ராஜேஷ் எம்.செல்வா, நடிகைகள் மீனா, கீர்த்தி சுரேஷ், தே.மு.தி.க. பொதுச்செயலா ளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் எம்.பி. உள்பட பலரும் அஞ்சலி செலுத்தி னர்.

ஆர்.பி.சவுத்ரியின் உடல் இன்று காலை 11 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு,கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் ஆர்.பி.சவுத்ரியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஆர்.பி.சவுத்ரியின் மறை வுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நான் அவருடன் இணைந்து படம் எடுக்கவில்லை. ஆனாலும் என் நெருங்கிய நண்பர். 99 படம் எடுத்து விட்டேன். 100 படம் எடுத்துவிட்டு ஓய்வெடுக்கலாம் என நினைக்கிறேன். அதனால் 100வது படம் நீங்கள் நடிக்க வேண்டும் என சௌத்ரி கூறி இருந்தார். நாணயம், நேர்மை, கடின உழைப்பு, தெய்வப் பக்தி.. அதுதான் ஆர்.பி.சவுத்ரிஎளிய குணமும், தெளிவான சிந்தனையும் கொண்ட ஒரு மாமனிதரை திரையுலகம் இழந்துவிட்டது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com