ஆஸ்கர் தேர்வு குழுவில் இணைந்த ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் - இயக்குனர் ராஜமவுலி வாழ்த்து

ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிலிருந்து 6 நபர்கள் ஆஸ்கர் தேர்வு குழுவில் இணைந்துள்ளனர்.
ஆஸ்கர் தேர்வு குழுவில் இணைந்த ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் - இயக்குனர் ராஜமவுலி வாழ்த்து
Published on

ஐதராபாத்,

ஒவ்வோரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் கமிட்டி வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2023ம் ஆண்டு 'ஆஸ்கர் விருதுகள்' தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்கர் விருது குழுவில் தேர்வாகியுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ராஜமவுலி பதிவிட்டுள்ளார். அதில், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிலிருந்து 6 நபர்கள் ஆஸ்கர் தேர்வு குழுவில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாகவுள்ளது. இந்திய சினிமாவில் இருந்து இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com