ரூ.200 கோடி மோசடி புகார்: அமலாக்கத்துறையில் நடிகை ஜாக்குலின் ஆஜர்

ரூ.200 கோடி மோசடி புகாரில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.
ரூ.200 கோடி மோசடி புகார்: அமலாக்கத்துறையில் நடிகை ஜாக்குலின் ஆஜர்
Published on

ரூ.200 கோடி மோசடி புகாரிலும், இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிலும் கைதான சுகேஷ் சந்திரசேகருடன் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை ஜாக்குலின் மறுத்தார்.

இந்த நிலையில் இருவரும் நெருக்கமாக முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் ரூ.10 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கியதாகவும், அதில் ரூ.52 லட்சம் மதிப்பிலான குதிரை, ரூ.9 லட்சம் மதிப்பிலான 4 பெர்சியன் பூனைகளும் அடங்கும் என்றும் அமலாக்கதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நேரில் ஆஜராகும்படி ஜாக்குலினுக்கு சம்மனும் அனுப்பியது. துபாய் செல்ல முயன்ற அவரை மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com