வெளியீட்டுக்கு முன்பே ரூ.50 கோடி வசூல்... சாதனை படைக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’

டிசம்பர் 17-ந் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
வெளியீட்டுக்கு முன்பே ரூ.50 கோடி வசூல்... சாதனை படைக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’
Published on: 

ஹாலிவுட் திரையுலகின் பிரபலமான மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படத் தொடரில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே'. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவான்ஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

முன்பதிவில் ரூ.50 கோடி வசூல்

டிசம்பர் 17-ந் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் முன்பதிவு வசூல் ரூ.50 கோடியைக் கடந்துள்ளது.

நேற்றையை டிக்கெட் முன்பதிவின் நிலவரப்படி ( நவம்பர் 23-ம் தேதி) சுமார் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.அதாவது சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆங்கிலப் படத்துக்கு அதிக வரவேற்பு

இந்தி மற்றும் தமிழ் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போல இந்த ஹாலிவுட் படத்திற்கும் கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக மராட்டியம், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரூ.100 கோடி தொடக்க வசூல் இலக்கு

முன்பதிவிலேயே இவ்வளவு பெரிய தொகையை வசூலித்துள்ளதால், இந்தியாவில் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலை எட்டும் ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனையை 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டிசம்பர் 17-ந் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வசூல் சாதனையை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

X