'உங்கள் இசையமைப்பாளரால் முடியவில்லை...எங்கள் பாடல்தான் ஜெயிக்க வைக்கிறது' - கங்கை அமரன்


Rs. 7 crore salary...our song is what makes the film a success - Gangai Amaran
x
தினத்தந்தி 21 April 2025 9:19 AM IST (Updated: 23 April 2025 6:27 PM IST)
t-max-icont-min-icon

ரூ.7 கோடி சம்பளம் வாங்குபவரின் பாடல் ஹிட் ஆகவில்லை என்று கங்கை அமரன் கூறினார்.

சென்னை,

விட்பா முதலாவது சர்வதேச மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கங்கை அமரன், தங்கள் பாடல்தான் படத்தை ஜெயிக்க வைப்பதாக கூறினார். அவர் கூறுகையில்,

'ரூ.7 கோடி சம்பளம் கொடுத்து இசையமைப்பாளர் வைத்திருக்கிறீர்கள். அவர் போட்ட பாடலுக்கு கைத்தட்டல் விழாமல் எங்கள் பாடலுக்கு விழுகிறது. எங்கள் பாடலை போட்டு நீங்கள் ஆடினால் என்ன அர்த்தம். ரூ.7 கோடி சம்பளம் வாங்கி போட்டவர் பாடல் ஹிட் ஆகவில்லை. எங்கள் பாடலை போட்ட உடனே கைத்தட்டல் வருகிறது.

அப்போது அதற்கு எங்களுக்கும் பங்கு உண்டு இல்லையா?. அதை கொடுத்திருக்க வேண்டும் இல்லையா?. எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் இல்லையா?. அனுமதி கேட்டிருந்தால் அண்ணன் இலவசமாக கொடுத்திருப்பார்.

கேட்காமல் பயன்படுத்தியதால்தான் அண்ணனுக்கு கோபம் வருகிறது. பணத்தாசையால் நாங்கள் இதை பண்ணவில்லை. அது கொட்டிக்கிடக்கிறது. விதி என்று ஒன்று உள்ளது.

அஜித் படம், அதெல்லாம் ஒன்னும் இல்லை, எங்கள் பாட்டு, அவ்வளவுதான். உங்கள் இசையமைப்பாளரால் அதை செய்யமுடியவில்லை, எங்கள் பாடல்தான் ஜெயிக்க வைக்கிறது. அதை கேட்டிருந்தால் இன்னும் சந்தோஷமாக கொடுத்திருப்போம்' என்றார்.

1 More update

Next Story