"என்டிஆர்-நீல்" படம் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கும் ருக்மிணி வசந்த்

"என்டிஆர்-நீல்" படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிப்பதாக கூறப்படுகிறது.
சென்னை,
பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் "என்டிஆர்-நீல்" படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், “காந்தாரா: சாப்டர் 1” படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில், ருக்மணியிடம் "என்டிஆர்-நீல்" படம் பற்றி கேட்கப்பட்டது, ஆனால் அவர் சாதுர்யமாக அதனை தவிர்த்தார். மற்ற விளம்பர நிகழ்வுகளிலும், படம் பற்றி இதே போன்ற கேள்விகளை அவர் எதிர்கொண்டார். ஆனால், மீண்டும் அவர் அது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
படத்தில் தனது ஈடுபாடு குறித்து தயாரிப்பாளர்கள் அறிவிப்பை வெளியிடும் வரை காத்திருக்க அவர் விரும்புவதாகத் தெரிகிறது.
"என்டிஆர்-நீல்" படத்தின் படப்பிடிப்பு இம்மாத இரண்டாம் பாதியில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இப்படத்தை அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.






