'நேஷனல் கிரஷ்' பற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை - ருக்மிணி

காந்தாரா படத்திற்கு பிறகு ருக்மிணியை 'நேஷனல் கிரஷ் ' என்று கூறி வருகின்றனர்.
சென்னை,
காந்தாரா சாப்டர் 1 வெளியான பிறகு, ருக்மிணி வசந்தின் பெயர் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவரின் அழகு மட்டுமல்ல நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்திருப்பதும் ஆகும். அவர் ஒரு நட்சத்திர கதாநாயகியாக முத்திரை பதித்துள்ளார்.
காந்தாரா படத்தைப் பார்த்த அனைவரும் அவரை 'நேஷனல் கிரஷ் ' என்று கூறி வருகின்றனர். புஷ்பா படத்திற்குப் பிறகு ராஷ்மிகா மந்தனாவுக்குக் கிடைத்த அதே அங்கீகாரம் ருக்மிணிக்கு தற்போது கிடைத்திருக்கிறது. இருவரும் கன்னடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சிறப்பு.
இந்நிலையில், 'நேஷனல் கிரஷ் ' என்று அழைக்கப்படுவதற்கு ருக்மிணி ரியாக்ட் செய்துள்ளார். அவர் கூறுகையில்,
'கடந்த சில நாட்களாக, பலர் நேஷனல் கிரஷ் என்று சொல்லி வருகிறார்கள். இதை கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. அவை மகிழ்ச்சியையும் தருகின்றன. ஆனால், இதுபோன்ற பாராட்டுகளைப் பற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை. அவை தற்காலிகமானவை. காலப்போக்கில், அது மாறும்’ என்றார்.






