

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிப்போயிருக்கும் ருக்மிணி வசந்த், தமிழில் விஜய் சேதுபதியுடன் 'ஏஸ்', சிவகார்த்திகேயனுடன் 'மதராஸி' படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் படம் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ருக்மிணி வசந்திடம், 'வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ருக்மிணி வசந்த், "வாழ்க்கையில் எனக்கு 'ரிஸ்க்' எடுப்பதுதான் மிகவும் பிடித்த விஷயம். பொதுவாக எந்த விஷயத்திலும் சவால்களை சந்திப்பதில் ஒரு திரில் இருக்கிறது. அதை அனுபவித்தவருக்கு தான் அதன் சுகம் தெரியும்.
முடியாது என்று சொல்வதற்கு பதில், ரிஸ்க் எடுத்து தோற்பது மேல். முயற்சி இல்லாத சூழலில் வெற்றிகள் என்பது முடங்கித்தான் போகும். எனவே வாழ்க்கையில் 'ரிஸ்க்' எடுங்கள். நல்ல முடிவுகளை காலம் தரும்" என்றார்.