

சென்னை,
சமீபத்தில் வெளியான 'குபேரா மற்றும் கூலி' படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நாகார்ஜுனா, நித்தம் ஒரு வானம், ஆகாசம் போன்ற படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் தனது 100-வது படத்தில் நடிக்க உள்ளார்.
தற்காலிகமாக கிங்100 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு 'லாட்டரி கிங்' என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி ஆகியோர் சிறப்பு வேடங்களில் நடிப்பார்கள் என்றும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.