மமிதா பைஜுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்தி... நடிகை கொடுத்த பதில்

மமிதா பைஜுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல் ஒன்று கவனம் பெற்றுள்ளது.
மமிதா பைஜுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்தி... நடிகை கொடுத்த பதில்
Published on: 

அவரது சகோதரர் மிதுன் பைஜுதான் மமிதாவின் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும், அவரது காதல் மற்றும் திருமணம் தொடர்பான முடிவுகளைக்கூட அவரே தீர்மானிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்தடுத்த படங்களில் மமிதா பைஜு

மலையாளத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜு. ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

திரைப்படங்களைப் பொறுத்தவரை, மமிதா பைஜு தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’, சங்கீத் பிரதாப்புடன் ‘ஹலோ டியர்’ உள்ளிட்ட படங்கள் அவரது கைவசம் உள்ளன. மேலும், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் பரவி வதந்தி

இந்நிலையில், மமிதா பைஜுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல் ஒன்று கவனம் பெற்றுள்ளது. அதில், அவரது சகோதரர் மிதுன் பைஜுதான் மமிதாவின் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும், அவரது காதல் மற்றும் திருமணம் தொடர்பான முடிவுகளைக்கூட அவரே தீர்மானிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

“என்னது இது?” என ஆச்சரியமடைந்த நடிகை

இந்தப் பதிவைப் பார்த்த மமிதா பைஜு, அதற்குக் கருத்து தெரிவித்து தனது எதிர்வினையை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பதிவின் கீழ், ‘Whaaat?!’ என்ற வாசகத்துடன் கூடிய மினியன் ஸ்டிக்கரைப் பகிர்ந்துள்ளார்.

தனது சகோதரர் குறித்து பரவிய தகவலை ஆச்சரியத்துடன் எதிர்கொண்ட அவர், நகைச்சுவையான முறையில் பதிலளித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பரவி வந்த தகவலுக்கு அவர் மறைமுகமாக எதிர்வினையாற்றியுள்ளார். தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் மமிதா பைஜு, தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்தியால் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com