ரஜினிகாந்தின் ஓய்வு குறித்து பரவும் தகவல் - லதா ரஜினிகாந்த் விளக்கம்


Rumors circulating about Rajinikanths retirement - Latha Rajinikanth explains
x

ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் ஓய்வு எடுக்கப்போவதாக தகவல் பரவி வந்தது.

சென்னை,

'சூப்பர் ஸ்டார்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ள இவர், நெல்சன் இயக்கும் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இதில் 'கூலி' படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை என்பதால் அவர் ஓய்வு எடுக்கப்போவதாக ஒரு தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ஓய்வு குறித்துப் பரவும் தகவல்களுக்கு லதா ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைததுள்ளார். இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், "எனக்குத் தெரிந்தால் சொல்லலாம்..இன்னும் அதைப் பற்றி யோசிக்கவில்லை" என்றார்.

1 More update

Next Story