களரி கற்கும் “ரன் பேபி ரன்” பட நடிகை


களரி கற்கும்  “ரன் பேபி ரன்” பட நடிகை
x

நடிகை இஷா தல்வார், விரைவில் நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக, தொன்மையான தற்காப்புக் கலையான களரியைக் கேரளாவில் கற்று வருகிறார்.

மும்பையை சேர்ந்த நடிகை இஷா தல்வார், கடந்த 2012ல் தேசிய விருது வென்ற ‘தட்டத்தின் மறயத்து’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். தமிழில் பத்ரி இயக்கிய ‘தில்லு முல்லு’, மித்ரன் ஜவஹர் இயக்கிய ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ஆர்ஜே.பாலாஜி நடித்த ‘ரன் பேபி ரன்’ படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விரைவில் இவர் நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக, தொன்மையான தற்காப்புக் கலையான களரியைக் கேரளாவில் கற்று வருகிறார். களரியைக் கற்றுக்கொடுப்பவர்கள் மற்றும் இக்கலையை கற்கும் மாணவர்களுடன், தான் இருக்கும் புகைப்படங்களை, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், களரி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story