

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக்ஷய் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் துரந்தர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது துரந்தர் 2 உருவாகியுள்ளது. 3 மணி நேரம் 40 நிமிடங்கள் கொண்ட இந்த படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
அதே தேதியில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படமும் வெளியாக உள்ளது. கே.வி.என். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டாக்ஸிக் படமும் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் கொண்டுள்ளது.
உலகளவில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களாக இருக்கிறது யாஷ் நடித்துள்ள ‘டாக்சிக்’ மற்றும் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர் 2’. மார்ச் 19-ம் தேதி இந்த இரண்டு படங்களுமே வெளியாகவுள்ளன. தற்போது இந்த இரண்டு படங்கள் ஓடக்கூடிய நேரம் என்னவென்று தெரியவந்துள்ளது. இவை இரண்டுமே 3 மணி நேரத்துக்கு மேல் இருப்பது திரையரங்க உரிமையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
3 மணி நேரத்துக்கு மேல் இருப்பதால் கூடுதல் காட்சிகள் திரையிட முடியாத சூழல் அமைந்துள்ளது. இந்த இரண்டுமே ஒரு நாளைக்கு 4 காட்சிகளுக்கு மேல் திரையிட முடியாது. இதில் ‘துரந்தர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால், ’துரந்தர் 2’ படத்துக்கு உலகளவில் மாபெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதே வேளையில் ‘கே.ஜி.எப் 2’ படத்தின் வெற்றிக்கு பிறகு யாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘டாக்சிக்’ என்பது குறிப்பிடத்தக்கது.