ஆதரவற்றோர் இல்லத்தில் “சச்சின்” திரைப்பட நடிகர் ... உதவிய ரஜினிகாந்த்

விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படத்தில் ஜெனிலியாவின் தந்தையாக மோகன் சர்மா நடித்திருந்தார்.
ஆதரவற்றோர் இல்லத்தில் “சச்சின்” திரைப்பட நடிகர் ... உதவிய ரஜினிகாந்த்
Published on

80 வயதாகும் நடிகர் மோகன் சர்மா, கும்மிடிப்பூண்டியில் உள்ள முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.

புனேவிலுள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடிப்பு பயின்ற முதல் தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்கள் நடித்ததோடு திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என சினிமாவின் பல்வேறு தளங்களில் இயங்கியவர். தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் சினிமா விருதுகளை வாங்கியவர். பிலிம் சேம்பர் எனப்படும் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தவர். இத்தனை பெருமைக்குரிய மோகன் சர்மா தற்போது த‌ன்னுடைய 80 வது வயதில் சென்னை, கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகி இருக்கிறார். சுமார் 170 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

20 திரைப்படங்களை தயாரித்து, திரைத்துறையில் தனக்கென ஒரு முத்திரையையும் பதித்தார். விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படத்தில் ஜெனிலியாவின் தந்தையாக நடித்திருந்தார்.

தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழுவிலும், சர்வதேச திரைப்பட விழாவுக்கான இந்திய பனோரமா படங்கள் தேர்வுக் குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.

2012ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நம்ம கிராமம்’ திரைப்படம், ஜாதி அடக்குமுறையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் தமிழக அரசும் கேரள அரசும் வழங்கிய விருதுகளை வென்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இந்தப் படத்தைப் பாராட்டி, தாம் மிகவும் விரும்பும் திரைப்படங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டதாக மோகன் சர்மா பின்னர் தெரிவித்துள்ளார்.

மோகன் சர்மாவுக்கு ஏன் இந்த நிலை?

மோகன் சர்மாவின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது சோகமான நிலையில் உள்ளது. நடிகை லட்சுமியை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்ற அவர், சாந்தி என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.

ஆதரவற்றோர் இல்லத்தில் மோகன் சர்மா

தற்போது 80 வயதாகும் மோகன் சர்மா, கும்மிடிப்பூண்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். அங்கு உணவும் தங்குமிடமும் கிடைத்தாலும், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருந்து வாங்க கூட பணமின்றி அவர் சிரமப்பட்டுள்ளார்.

ரஜினி நிதியுதவி

இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், அவரை தொடர்புகொண்டு வங்கி விவரங்களை பெற்று ரூ.1 லட்சம் உதவி செய்துள்ளார்.

“சினிமாவில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், தனது ‘நம்ம கிராமம்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை யாராவது வாங்கினால், தனது மருத்துவச் செலவுகளுக்கு உதவியாக இருக்கும்” என்று மோகன் சர்மா தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com