பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகும் சச்சின் தெண்டுல்கரின் மகள்...! ஹீரோ... ?

சாரா தெண்டுல்கர் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகும் சச்சின் தெண்டுல்கரின் மகள்...! ஹீரோ... ?
Published on

மும்பை

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா தெண்டுல்கர் மருத்துவ படிப்பை முடித்துள்ள சாரா நடிப்பில் ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது.

அவரது இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தில் ஸ்டைல் குறிப்புகள், படங்கள், பயண குறிப்புகள் போன்றவைகளால் நிரம்பி வழிகின்றன. 2021-ல் மாடலிங் துறையில் அவர் அறிமுகமானபோது, சாரா பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைப்பார் என்ற பேச்சுகள் எழுந்தன.

இந்நிலையில், சாரா விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிப்பில் மிகவும் ஆர்வமாக இருக்கும் அவர், சில பிராண்ட்களில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும், நடிப்பு வகுப்புகளுக்கு சென்று வருவதாகவும் பிரபல பாலிவுட் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும்பாலும் தன்னைப் பற்றி வெளியில் எதையும் தெரிவிக்காத சாரா, தனது நடிப்பு திறமையால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். அவர் மிகவும் திறமையானவர், அவருடைய பெற்றோர் சாரா எடுக்கும் முடிவை ஆதரிப்பார்கள் என சாராவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாரா தெண்டுல்கர் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால்., சச்சின் டெண்டுல்கர், தனது மகள் திரைப்படத்தில் நடிப்பது குறித்து வரும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com