சச்சின் ரீ-ரிலீஸ்: ரசிகர்கள் கொண்டாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு


Sachins re-release: Fans celebration causes traffic disruption
x
தினத்தந்தி 18 April 2025 10:49 AM IST (Updated: 19 April 2025 4:41 PM IST)
t-max-icont-min-icon

'சச்சின்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீசாகி உள்ளது

மதுரை,

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2005-ம் ஆண்டு விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான 'சச்சின்' இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

'சச்சின்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீசாகி உள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளாவில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், மதுரையில் விஜய் ரசிகர்கள் பைக்கில் ஊர்வலமாக வந்து அலப்பறை கிளப்பி உள்ளனர். இதனால், அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story