ரசிகர்களை அப்படி பிரித்து பார்ப்பது வருத்தம் அளிக்கிறது - நடிகை ஜோதிகா

நடிகை ஜோதிகாவுக்கு இந்தி பட வாய்ப்புகள் வருகின்றன.
ரசிகர்களை அப்படி பிரித்து பார்ப்பது வருத்தம் அளிக்கிறது - நடிகை ஜோதிகா
Published on

ஜோதிகா 1997-ல் வெளியான டோலி சஜா கே ரஹ்னா என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு இந்தி படங்களில் அவர் நடிக்கவில்லை. தமிழில் 1999-ல் நடித்த வாலி படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து தமிழ் படங்களிலேயே நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்தியில் அஜய்தேவ்கனுடன் சைத்தான், ராஜ்குமார் ராவுடன் ஸ்ரீகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களுமே வரவேற்பை பெற்றதால் ஜோதிகாவுக்கு இந்தி பட வாய்ப்புகள் வருகின்றன.

இது குறித்து ஜோதிகா கூறியதாவது:-

இந்தி திரையுலகில் நீண்ட இடைவெளிக்கு பிறகு எனக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியமாகவும் இருக்கிறது. எனக்கு நல்ல கதை அமையாததால்தான் இந்தியில் இத்தனை காலம் நடிக்காமல் இருந்தேன்.

தமிழ், இந்தியில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன். வடஇந்திய, தென்னிந்திய ரசிகர்கள் என்று பிரித்து பார்ப்பது வருத்தம் அளிக்கிறது. தென்னிந்திய படங்களை வட இந்திய ரசிகர்கள் அதிகம் பார்க்கிறார்கள். எல்லோரையும் இந்திய ரசிகர்களாகவே பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com