அட்லீ இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

இயக்குனர் அட்லீ இயக்கும் புதிய படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார்.
அட்லீ இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் இருந்து இன்று ஆங்கில திரையுலகம் வரை சென்று கொண்டிருக்கும் முன்னணி இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து "தெறி, மெர்சல், பிகில்" ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார். பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்கிய 'ஜவான்' படம் ரூ. 1,200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் அட்லீ தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருந்த நிலையில், இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, "ஆச கூட, கட்சி சேர, சித்திர புத்திரி" ஆகிய ஆல்பம் பாடல்களை பாடி, இசையமைத்து புகழ்பெற்ற சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாய் அபயங்கர் தற்போது, ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் 'சூர்யா 45' படத்திற்கும், லோகேஷ் கனகராஜ் தயாரித்து வரும் 'பென்ஸ்' படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com