"பென்ஸ்" பட அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்

ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' திரைப்படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.
"பென்ஸ்" பட அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை 'ரெமோ' பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, 'பென்ஸ்' படமும் (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) எல்.சி.யூ-வில் இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்த படத்தில் தனுஷின் 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை சம்யுக்தா மேனன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "பென்ஸ் லோடிங்" என்று குறிப்பிட்டு அப்டேட் கொடுத்து இருக்கிறார்.

"எல்.சி.யுவில் ஏற்கனவே இசையமைப்பாளர்கள்அனிருத் மற்றும் சாம் சிஎஸ் உள்ளனர், நான் மூன்றாவதாக இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 'பென்ஸ்' படத்தில் ஒவ்வொரு ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருக்கலாம். படத்தில் கிட்டத்தட்ட ஏழு முதல் எட்டு பாடல்கள் உள்ளன" என இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமீபத்திய பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com