“கருப்பு” படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகளை தொடங்கிய சாய் அபயங்கர்

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
“கருப்பு” படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகளை தொடங்கிய சாய் அபயங்கர்
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாட்டார் தெய்வ வழிபாடு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு கிராமத்து பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று, ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை வருகிற அக்டோபர் 1ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் கருப்பு படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் தொடங்கியுள்ளார். இதனை அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com