ஸ்மார்ட்போனுக்கு விடை கொடுத்த சாய் அபயங்கர் – காரணம் என்ன?

பெரும்பாலும் ஸ்மார்ட்போனில் இருந்து விலகியே இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஸ்மார்ட்போனுக்கு விடை கொடுத்த சாய் அபயங்கர் – காரணம் என்ன?
Published on

சென்னை,

சாய் அபயங்கர், "கட்சி சேரா", "ஆச கூட" போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் புகழ் பெற்றார். இந்த பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய இசையமைப்பில் முதல் படமாக 'டியூட்' வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து 'கருப்பு', 'மார்ஷல்', 'அட்லி இயக்கி வரும் ராக்கா படம்', விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.தமிழ் திரையுலகில் புதுமையான இசை மொழியால் வேகமாக உயர்ந்து வரும் இசையமைப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் சாய் அபயங்கர்.

இந்த நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதை தவிர்ப்பதாக கூறியுள்ளார். அதாவது, என்னிடம் 1000-க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. 6-ம் வகுப்பில் இருந்தே நான் அனைத்தையும் இயற்றி உள்ளேன் 60 வயதிற்கு பிறகு என் உடல் நலம் பாதிக்கப்பட்டால் நான் அந்த பாடல்களை பயன்படுத்துவேன். 1000 பாடல்களையும் பயன்படுத்துவேன் என்று சொல்லவில்லை. அவற்றுள் எது சிறந்ததோ அதை மட்டும் பயன்படுத்துவேன்.

மேலும், சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பதற்காக நான் ஒரு சாதாரண நோக்கியா செல்போனை பயன்படுத்துகிறேன். சமூக ஊடகங்களில் உங்களுக்கு தேவையானதும் தேவையில்லாததும் உள்ளன. அதனால்தான் சாதாரண போனை பயன்படுத்துகிறேன். இதில்தான் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அழைக்கின்றனர். பெரும்பாலும் ஸ்மார்ட்போனில் இருந்து விலகியே இருக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com