ராமாயணம் படத்தில் நடிக்க 2 வருடங்கள் கால்ஷீட் ஒதுக்கிய சாய் பல்லவி

ராமாயணம் படத்தில் நடிக்க 2 வருடங்கள் கால்ஷீட் ஒதுக்கிய சாய் பல்லவி
Published on

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சாய் பல்லவி மற்ற நடிகைகள் போல் கவர்ச்சியில் இறங்காமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். இவரது நடனத்துக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார்.

கடந்த வருடம் சாய் பல்லவி நடிப்பில் வந்த விராட பருவம், கார்கி படங்கள் கமர்ஷியலாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவியை அந்த படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அணுகி இருப்பதாகவும் சாய்பல்லவியும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சாய் பல்லவி கால்ஷீட் ஒதுக்கி இருப்பதாக தெலுங்கு திரையுலகில் பேசுகிறார்கள். இந்த இரண்டு வருடங்களும் வேறு படங்களில் அவர் நடிக்க மாட்டார் என்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com