சாய் பல்லவிக்கு கடவுள் பக்தியும் சுத்தமான மனசும் இருக்கு - தனுஷ்

தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படம் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
சாய் பல்லவிக்கு கடவுள் பக்தியும் சுத்தமான மனசும் இருக்கு - தனுஷ்
Published on: 

சாய் பல்லவி போன்ற ஒரு சிறந்த நடிகையை தவிர வேறு யாராலும் ‘ராமாயணா’ படத்தில் சீதா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்திருக்க முடியாது என்று தனுஷ் பாராட்டியுள்ளார்.

தனுஷின் ‘ஓ.ம்’

'அமரன்' திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படம் ‘ஓ.ம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் வெளியான ‘அலாக்கா லூவா’ மற்றும் ‘வீழா வீரா’ பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் செம்மரக் கடத்தில் பின்னணியில் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. நவம்பர் 20ஆம் தேதி படம் வெளியாகிறது. இதனால் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதில் தனுஷ் பேசிய வீடியோ தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

தனுஷ் புகழாரம்

‘ஓ.ம்’ படத்தின் முன்னோட்ட விழாவில் பேசிய நடிகர் தனுஷ், ‘ராமாயணா’படத்தில் சாய் பல்லவி சீதை வேடத்தில் நடித்தது குறித்து எழுப்பப்படும் தேவையற்ற சர்ச்சைகள் தனக்கு முற்றிலும் வியப்பளிப்பதாகக் கூறினார். இத்தகைய விமர்சனங்கள் எதற்காக எழுகின்றன என்பதே தனக்குப் புரியவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஒருவேளை ஒட்டுமொத்த இந்தியாவிலும் தீவிரமாகத் தேடினால் கூட அன்னை சீதையின் கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவியைத் தவிர வேறு யாரும் இவ்வளவு பொருத்தமாக இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

சாய் பல்லவியின் நிஜ வாழ்க்கை குணநலன்களைப் பற்றிப் பேசிய தனுஷ், அவர் முழுமையான ஆன்மீக ஈடுபாடும், அதீத பக்தி உள்ளவர் என்று புகழாரம் சூட்டினார். படப்பிடிப்பு தளங்களில் ஷாட் இடைவேளை சமயங்களில் கூட அவர் தொடர்ந்து கடவுளைப் பிரார்த்தனை செய்வதில் தீவிரமாக இருப்பார் என்று தனுஷ் சுட்டிக்காட்டினார். மிகவும் தூய்மையான மனதுக்கு சொந்தமான அவர், திரையில் மிக அழகாகத் தெரிவதுடன் ஒரு அசாத்தியமான திறமை வாய்ந்த நடிகை என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

ஏற்கனவே தனுசுடன் இணைந்து ‘மாரி 2’ திரைப்படத்தில் நடித்திருந்த சாய் பல்லவி, தற்போது தங்களது புதிய படமான ‘ஓ.ம்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு தம்முடன் பணியாற்றியபோது மிகவும் அமைதியாகவும் தயக்கத்துடனும் காணப்பட்ட அவர், தற்போது நடிப்புக் கலையில் முழுமையான தேர்ச்சியும் அபாரமான ஆளுமைத் திறனும் பெற்று வளர்ந்திருப்பது தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகத் தனுஷ் கூறினார். கடினமான சவால்களை எதிர்கொண்டு துணிச்சலாகச் செயல்படும் சாய் பல்லவியின் கலைப் பயணம் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 6ஆம் தேதி வெளியான ‘ராமாயணா’ படத்தில் சீதை சுருள் முடியுடன் இருப்பது சரியாக பொருந்தவில்லை என்றும் அவர் வால் எடுத்து சண்டையிட்ட காட்சிகள் வரலாற்று திரிபு என்றும் ஒரு சிலர் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X