"ராமாயணா" படம் குறித்து சாய் பல்லவி பதிவிட்ட போஸ்ட் வைரல்

ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயாணா’ படம் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.
மும்பை,
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யாஷ் மற்றும் நட்சத்திர நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் 'ராமாயணா'. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் ரன்பீர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.
நிதேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதில் முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது. அடிக்கடி இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.
இப்படத்தின் 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைப்பது உறுதியாகியுள்ளது. 'ராமாயணா' படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் 'ராமாயாணா' படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நடிகை சாய்பல்லவி, "அம்மா சீதாவின் ஆசிர்வாதத்துடன், ராமயணக் காவியத்தை மீண்டும் உருவாக்கும் பணியில், தெய்வீகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து, அந்தப் பயணத்தை அனுபவிக்கிறேன்!. இது போன்ற ஒரு நடிகர்கள் மற்றும் குழுவினருடன், நாம் அடைய முயற்சிக்கும் அற்புதத்தை நீங்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்தப் பதிவு வைரலாகியிருகிறது.






