'ஏக் தின்' பட விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய சாய் பல்லவி

அமீர்கான் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஏக் தின்' படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார்.
'ஏக் தின்' பட விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய சாய் பல்லவி
Published on

அமீர்கான் தயாரிப்பில் அவரது மகன் ஜூனைத் கான் நடிப்பில் சுனில் பாண்டே இயக்கியுள்ள 'ஏக் தின்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. 2016ல் வெளியான தாய்லாந்து நாட்டு படமான 'ஒன் டே' படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. காதல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் வருகிற 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இதில் சாய் பல்லவி பேசியதாவது;

"நான் இதுவரை எப்படி பணியாற்றினேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் நான் செய்த எதுவாக இருந்தாலும், அது என்னை இவ்வளவு திறமையானவர்களால் நிரம்பிய ஒரு அறைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமீர்கான் பொதுமக்கள் முன்னிலையில் இவ்வளவு உணர்ச்சிவசப்படக்கூடிய அளவுக்கு வேற லெவல் மனிதராக இருக்கிறார். இந்தத் துறையில் என் பயணத்தை நினைத்துப் பார்க்கும்போது, இவ்வளவு திறமைகள் ஒன்று சேரும் ஒரு தியேட்டருக்கோ, ஒரு இடத்துக்கோ உண்மையாக நான் வருவேன் என்று நினைத்ததே இல்லை. ஆனால் நான் செய்த எல்லாமே என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த முழுப் பயணத்திற்கும் நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com