சாய் பல்லவியின் “ஏக் தின்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


சாய் பல்லவியின் “ஏக் தின்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
x
தினத்தந்தி 16 Jan 2026 11:18 AM IST (Updated: 16 Jan 2026 11:21 AM IST)
t-max-icont-min-icon

அமீர்கான் தயாரிப்பில் உருவாகும் ‘ஏக் தின்’ புதிய திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்துவருகிறார்.

பிரேமம், அமரன், ஷ்யாம் சிங்கா ராய் மற்றும் பிடா போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சாய் பல்லவி . ரசிகர்கள் அவரை நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதற்காகப் பாராட்டுகிறார்கள்.

இவர் நடிகர் அமீர்கான் தயாரிப்பில் உருவாகும் ‘ஏக் தின்’ எனும் புதிய திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகின்றார். இயக்குநர் சுனில் பாண்டே இயக்கத்தில் உருவாகும், இந்தப் படத்தில் நடிகர் ஜுனைத் கான் நாயகனாக நடிக்கின்றார். மேலும், இப்படத்திற்கு இசையமைப்பளர் ராம் சம்பத் இசையமைக்கின்றார்.

இந்த நிலையில், ‘ஏக் தின்’ திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் வரும் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் "ராமாயணா" பாகம் 1 மற்றும் பாகம் 2 திரைப்படங்களில் நடிகை சாய் பல்லவி "சீதை" கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Related Tags :
Next Story