சாய் பல்லவியின் 'கார்கி' திரைப்படத்தின் புதிய அப்டேட்

'கார்கி' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது
சாய் பல்லவியின் 'கார்கி' திரைப்படத்தின் புதிய அப்டேட்
Published on

சென்னை,

இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.'கார்கி' படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி வருகிறது.

'கார்கி' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.அதன்படி 'கார்கி' படத்தின் 'யாத்ரீ 'என்ற பாடல் வெளியாகியுள்ளது.இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com