17 நாட்களில் இத்தனை கோடி வசூலா...சாதனை படைத்த ''சயாரா''

இந்த சாதனையை நிகழ்த்திய 16-வது இந்தி படம் இதுவாகும்.
மும்பை,
இயக்குனர் மோஹித் சூரி இயக்கத்தில், அறிமுக நடிகர் அஹான் பாண்டே , நடிகை அனீத் பத்தா நடித்த 'சாயரா' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் வெறும் 17 நாட்களில் ரூ.300 கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் நுழைந்து சாதனை படைத்திருக்கிறது சயாரா திரைப்படம். இந்த சாதனையை நிகழ்த்திய 16-வது இந்தி படம் இதுவாகும்.
அஹான் பாண்டே நடித்த இந்த திரைப்படம் தொடர்ந்து அதே ஓட்டத்தைத் தொடர்கிறது. புதிய திரைப்படம் ரிலீஸாகி இருந்தாலும், வேகம் குறையவில்லை. இப்போது இப்படம் ரூ.350 கோடி வசூலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
Related Tags :
Next Story






