சாக்‌ஷி அகர்வாலின் “தீயோர் கூடம்” பட டிரெய்லர் வெளியானது

சக்திவேல் இயக்கத்தில் சாக்‌ஷி அகர்வால், டேனியல் நடித்துள்ள ‘தீயோர் கூடம்’ படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகவுள்ளது.
சாக்‌ஷி அகர்வாலின்  “தீயோர் கூடம்” பட டிரெய்லர் வெளியானது
Published on

ரூல் பிரேக்கர்கஸ் புரொடக்ஷன் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜெகன் நாராயணன், சக்திவேல், வீரமணி மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தீயோர் கூடம்’. சாக்‌ஷி அகர்வால், டேனியல் ஆனி போப் மற்றும் வையாபுரி இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை சக்திவேல் எழுதி, இயக்கி இருக்கிறார். மேலும் சாம்ஸ், வசந்தி, ஜேஸ்பர், சத்யா மற்றும் சம்யுதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வசந்த் இசைப்பேட்டை இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களை ராஜா எழுதியுள்ளார். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு வீட்டில் திடீரென நடக்கும் கொலை, அந்த சம்பவத்தில் சிக்கும் மூன்று பேர் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் அதில் இருந்து எப்படி மீண்டு வருகின்றனர் என்பதை திரில்லர் ஜானரில் பேசும் படமாக ‘தீயோர் கூடம்’ உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தேவா சமீபத்தில் வெளியிட்டார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை சாக்ஷி அகர்வால் முன் உடைந்த கண்ணாடிகளில் டேனில் ஆனி போப், வையாபுரி முகங்கள் இடம்பெற்று இருக்கிறது. போஸ்டரில் மர்மம், விசாரணை மற்றும் மனதை குழப்பும் சந்தேகங்களுக்கு விடை தேடும் கதையை தீயோர் கூடம் வித்தியாசமாக சொல்லும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், ‘தீயோர் கூடம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com