உலக அளவில் ரூ.500 கோடி வசூல் செய்த சலார்...!

படத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரத்விராஜும் நடித்துள்ளனர்.
உலக அளவில் ரூ.500 கோடி வசூல் செய்த சலார்...!
Published on

பெங்களூர், 

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரத்விராஜ் நடித்து இருக்கிறார். கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்து இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.295.7 கோடியை வசூல் செய்தது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து வசூல் ரேஸில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளது.

இந்த நிலையில், சலார் படம் உலகளவில் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com