'சலங்கை ஒலி' பட வாய்ப்பை கமல்ஹாசனால் இழந்தேன் - நடிகை ஜெயசுதா மலரும் நினைவு

‘சலங்கை ஒலி’ பட வாய்ப்பை கமல்ஹாசனால் இழந்தேன் என்று நடிகை ஜெயசுதா மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
'சலங்கை ஒலி' பட வாய்ப்பை கமல்ஹாசனால் இழந்தேன் - நடிகை ஜெயசுதா மலரும் நினைவு
Published on

கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயப்பிரதா நடித்து 1983-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி தேசிய விருது பெற்ற படம் சலங்கை ஒலி. இந்த படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பு கைநழுவிய மலரும் நினைவுகளை அப்போது தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜெயசுதா பகிர்ந்துள்ளார்.

ஜெயசுதா அளித்துள்ள பேட்டியில், "கே.விஸ்வநாத் இயக்கிய 'சலங்கை ஒலி' படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் என்னைத்தான் ஒப்பந்தம் செய்தார். எனக்கு அட்வான்ஸ் பணமும் கொடுத்தார். ஆனால் கமல்ஹாசன் உடனே தேதி கொடுக்காததால் படப்பிடிப்பு தாமதமாக தொடங்கியது. அதற்குள் நான் என்.டி.ராமராவ் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டேன்.

இதனால் 'சலங்கை ஒலி'யில் என்னால் நடிக்க முடியாது என்று சொல்லி கே.விஸ்வநாத்திடம் அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டேன். அட்வான்ஸ் திருப்பிக் கொடுத்ததால் கே.விஸ்வநாத்துக்கு என் மீது கோபம் வந்து விட்டது. நீண்ட நாட்கள் அவர் என்னுடன் பேசாமலே இருந்தார்.

'சலங்கை ஒலி' படத்தில் நான் நடிக்காமல் போனது நல்லதுதான். ஏனென்றால் அந்த கதாபாத்திரத்திற்கு எனது தோழி நடிகை ஜெயப்பிரதாதான் சரியான தேர்வு. அந்த படத்தில் ஜெயப்பிரதாவின் அற்புதமான நடிப்பால் அவருக்கு பெயரும், புகழும் கிடைத்தது'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com