அன்பிற்கும் வெற்றிக்கும் முற்றிலும் தகுதியானவர் சமந்தா - நடிகை நயன்தாரா

சமந்தா நடித்த ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றிக்கு நடிகை நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்பிற்கும் வெற்றிக்கும் முற்றிலும் தகுதியானவர் சமந்தா -  நடிகை நயன்தாரா
Published on

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நெகிழ்ச்சியான வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். அதில் “உனக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் சாம். அனைத்து அன்பிற்கும் வெற்றிக்கும் நீ முற்றிலும் தகுதியானவள். ‘மா இண்டி பங்காரம்’ படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு கதை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியானது.

இப்படத்தில் ‘ஸ்வர்ணா’ என்ற கதாபாத்திரத்தில், ஒரு கொலையாளியாக இருக்கும் தனது கடந்த கால ரகசியத்தை மறைத்து கிராமத்துக் குடும்பத்திற்குள் நுழையும் பெண்ணாக சமந்தா நடித்துள்ளார். பெண் மையக் கதையாக உருவான இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.13 கோடிக்கு மேல் வசூல் செய்து, 3 நாட்களில் ரூ.43 கோடியைக் கடந்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகிறது.

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவரது தோழியும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட இணை நட்சத்திரமுமான நயன்தாரா நெகிழ்ச்சியான வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “உனக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் சாம். அனைத்து அன்பிற்கும் வெற்றிக்கும் நீ முற்றிலும் தகுதியானவள். ‘மா இண்டி பங்காரம்’ படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com