

பின்னர் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்று வெளியேறி சென்னையில் குடியேறினார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது.
இயக்குனர் லாரன்சும் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார். பாலியல் கொடுமையில் சிக்கும் பெண்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் ஸ்ரீரெட்டி குரல் கொடுக்கிறார்.
இந்த நிலையில் நடிகை சமந்தாவை இப்போது வம்புக்கு இழுத்து இருக்கிறார். தனது முகநூல் பக்கத்தில் அரைகுறை ஆடையில் இருக்கும் சமந்தாவின் புகைப்படத்தையும் தனது புகைப்படத்தையும் வெளியிட்டு சமந்தா பெரிய நடிகையாக இருக்கலாம் ஆனால் எங்கள் இருவரில் யார் கவர்ச்சி? என்று கேள்வி எழுப்பி உள்ளார். சமந்தாவை விட தனது தோற்றம் கவர்ச்சியாக இருப்பதாக அவர் சுட்டி காட்டி உள்ளார்.
இது சமந்தா ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீரெட்டியை அவர்கள் கண்டித்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்த பிறகு நோயாளிபோல் இருக்கிறார். நடிகையர் திலகம் படம் டைரக்டரால் வெற்றி பெற்றதே தவிர கீர்த்தி சுரேசால் அல்ல என்று அவரையும் ஏற்கனவே சாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.