சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்

டிஜிட்டல் துறையின் அடுத்த வளர்ச்சியாக இணையதள தொடர்கள் என்ற வெப் தொடர்கள் உருவெடுத்துள்ளன. ஹாலிவுட்டில் வெப் தொடர்கள் அதிகம் வருகின்றன. அதை பார்த்து இந்தியிலும் தயாராகின்றன.
சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
Published on

தமிழ், தெலுங்கிலும் வெப் தொடர்கள் இப்போது எடுக்க தொடங்கி உள்ளனர். முன்னணி நடிகர் நடிகைகள் இவற்றில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

7 பாகங்களாக தயாராக உள்ள மகாபாரதம் வெப் தொடரில் அமீர்கான் நடிக்க உள்ளார். அக்ஷய்குமார் த என்ட் வெப் தொடரிலும் அர்ஜுன் ராம்பால் த பைனல் ஹால் தொடரிலும் நடிக்கின்றனர். அபிஷேக் பச்சன், கியூமா குரோஷி, நவாசுதின் சித்திக், ஜாக்கி ஷெராப், விவேக் ஓபராய், கரீஷ்மா கபூர், கியாரா அத்வானி ஆகியோரும் வெப் தொடருக்கு மாறி உள்ளனர்.

கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வெப் தொடராக தயாராகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். பிரசன்னா, பரத், பாபிசிம்ஹா, ரோபோ சங்கர், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். நித்யாமேனன் பிரீத் என்ற வெப் தொடரிலும் பிரியாமணி பேமிலிமேன் வெப் தொடரிலும் நடிக்கின்றனர்.

நடிகை காஜல் அகர்வாலும் வெங்கட் பிரபு இயக்கும் வெப் தொடரில் நடிக்கிறார். மீனா கரோலின் காமாட்சி என்ற வெப் தொடரில் நடிக்கிறார். ஹன்சிகா திகில் வெப் தொடரில் நடிக்கிறார். சமந்தாவும் வெப் தொடருக்கு மாறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com