'ஊ சொல்றியா' பாடலில் நடனமாடியது குறித்து மனம் திறந்த சமந்தா


Samantha has spoken about dancing in the Oo Solriya
x

’புஷ்பா: தி ரைஸ்' படத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனமாடி இருந்தார்.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா: தி ரைஸ்'. இந்த படத்தில் 'ஊ சொல்றியா' என்ற கவர்ச்சி பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். இப்பாடல் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில், 'ஊ சொல்றியா' பாடலில் நடனமாடியது குறித்து சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்,

''ஊ சொல்றியா' பாடல் வாய்ப்பு எனக்கு வந்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டேன். என் வாழ்க்கையில் என்னை ஒரு அழகான, கவர்ச்சியான பெண்ணாக ஒருபோதும் நான் கருதியதில்லை.

அதை ஒரு வாய்ப்பாக நினைத்து அந்த சவாலை ஏற்க முடிவு செய்தேன். நான் அதற்கு முன்பு அப்படி எதையும் செய்ததில்லை. எனவே, இப்பாடல் படப்பிடிப்பிற்கு முன்பு மிகவும் பதட்டமாக இருந்தேன்' என்றார்.

1 More update

Next Story