அனுபமாவின் 'பரதா' படத்தில் கேமியோ ரோலில் சமந்தா

பிரவின் கந்த்ரேகுலா இயக்கும் 'பரதா' படத்தில் கேமியோ ரோலில் சமந்தா நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனுபமாவின் 'பரதா' படத்தில் கேமியோ ரோலில் சமந்தா
Published on

சென்னை,

'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தின் இமாலய வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் தனுஷ் உடன் 'கொடி' படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில், 'கார்த்திகேயா - 2' , '18 பேஜஸ்', 'டில்லு ஸ்கொயர்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படத்தின் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வரவேற்பை பெற்றார்.

தற்போது இவர் 'பரதா' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனந்தா மீடியா பேனரில் விஜய் டான்கடா, ஸ்ரீனிவாசலு, ஸ்ரீதர் மகுவா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். பிரவீன் கந்த்ரேகுலா இந்தப் படத்தினை இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசரில் இரண்டு பெண்களுடன் பயணிக்கும் கிராமத்தியப் பெண்ணின் சாகசப் பயணத்தோடு கதை நகர்வதுபோல் உள்ளது. கிராமங்களில் பெண்கள் பரதா அணிவது, அவர்களை அடிமைகளாக சித்திரிக்க ஆண்கள் கொண்டுவந்த வழக்கம் என்று கூறப்படுகிறது. பரதா படத்திலும் பரதா அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பெண்களின் நிலையை கதைக்கருவாகக் கொண்டு கதை நகர்கிறது.

தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிகை சமந்தா நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே அனுபமா மற்றும் சமந்தா இணைந்து நடித்த 'அ ஆ' படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com