ரூ.10 கோடி சம்பளம் கேட்கும் சமந்தா

ரூ.10 கோடி சம்பளம் கேட்கும் சமந்தா
Published on

திருமண வாழ்க்கை முறிவு, மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிப்பு, சாகுந்தலம் படம் தோல்வி என்று பல பின்னடைவுகளை சந்தித்த நிலையிலும் சமந்தாவுக்கு சினிமா மார்க்கெட் சரியவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே பேமிலிமேன் 2 வெப் தொடர் வெற்றியால் வெப் தொடர்களில் நடிக்கவும் அழைப்புகள் வருகின்றன. தற்போது சிட்டாடல் என்ற ஹாலிவுட் வெப் தொடரின் இந்திய பதிப்பில் வருண் தவானுடன் இணைந்த நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த தொடர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ராஜ் மற்றும் டி.கே டைரக்டு செய்கிறார்கள். இதில் நடிக்க சமந்தா ரூ.10 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஒரு படத்துக்கு அதிகபட்சம் ரூ.4 கோடி சம்பளம் பெற்று வந்த அவர் தற்போது ரூ.10 கோடியாக சம்பளத்தை உயர்த்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆங்கிலத்தில் இதே தொடரில் நடிக்க கதாநாயகனுக்கு இணையான சம்பளம் பெற்றதாக பிரியங்கா சோப்ரா ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com