சமந்தாவின் புதிய அவதாரம்: தண்ணீரில் ஆட்டம் போடும் புகைப்படம் வைரல்

சமந்தா மீண்டும் முன்புபோல படங்களில் தீவிரமாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமந்தாவின் புதிய அவதாரம்: தண்ணீரில் ஆட்டம் போடும் புகைப்படம் வைரல்
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, மயோசிடிஸ் அழற்சி நோய் காரணமாக படாதபாடு பட்டார். இதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சைக்கு பின்னர் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட்டுள்ள சமந்தா, மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

தற்போது 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார். மேலும் புதிய படங்களுக்கான கதைகளையும் கேட்டு வருகிறார்.

இதற்கிடையில் சமந்தா மலேசியா சென்றுள்ளார். ஓய்வு, விளையாட்டு என ஆனந்தமாக பொழுதை கழித்து வரும் சமந்தா, அதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக நீச்சல்குளத்தில் அவர் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சமந்தா மீண்டும் முன்புபோல படங்களில் தீவிரமாக நடிக்க உள்ளதாகவும், அதற்கு முன்னோட்டமாக மனதை அமைதிப்படுத்தும் முயற்சியாக மலேசியாவில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நோய் தாக்கத்திலிருந்து விடுபட்டு மீண்டும் சமந்தா படங்களில் நடிக்க இருப்பது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com