“என்னை பற்றி நெகட்டிவ்வா பேசினா...- சமந்தா அதிரடி பதில்

சமந்தாவின் சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
“என்னை பற்றி நெகட்டிவ்வா பேசினா...- சமந்தா அதிரடி பதில்
Published on

சென்னை,

நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னை பற்றி நெகட்டிவ்வாக பேசுபவர்களை உடனே பிளாக் செய்துவிடுவதாக கூறினார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பல நாட்களாக படமேதும் நடிக்காமல் இருந்த இவர் தற்போது ’மா இன்டி பங்காரம் என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளார். இப்படத்தை இவரே தயாரிக்கிறார். நந்தினி ரெட்டி இயக்கும் இப்படம் வருகிற மே 15-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், சமந்தாவின் சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களின் கவனம் ஈர்த்து வருகிறது. அவர் பேசுகையில்,

``நான் ஸ்கூல் படிக்கும் காலத்தில் டைம் டேபிள் போட்டு அதன்படி படிப்பேன். எதிலும் கவனச்சிதறல் ஏற்படாது. தற்போது அப்படி இருக்க முடியுமா என தெரியவில்லை. ரீல்ஸ் பார்ப்பதால் வரும் ’பியர் ஆப் மிஸ்ஸிங் அவுட்’ (FOMO Effect) பயம் மோசமானது. அதனால் நான் என் இன்ஸ்டாகிராமை லாக் செய்துவிடுவேன். வேண்டுமென்றே போரிங்கான மற்ற விஷயங்களை செய்வேன். என்னை பற்றி நெகட்டிவ்வாக பேசுபவர்களை நான் உடனே பிளாக் செய்தும் விடுவேன்'' என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com