இயக்குனரை காதலிப்பதாக பரவிய வதந்தி - புகைப்படம் மூலம் பதிலளித்தாரா சமந்தா?

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
Samantha reacts to the rumor that she is in love with the director with a photo?
Published on

சென்னை,

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு  இருவரும் பிரிந்தனர். நடிகை சமந்தா தற்போது 'சிட்டாடல்' தொடரில் நடித்துள்ளார். இதனை பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் இயக்கி இருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, நடிகை சமந்தா சிட்டாடல் தொடர் இயக்குனர் ராஜை காதலிப்பதாக இணையத்தில் வதந்தி பரவியது. இந்நிலையில், சமந்தா புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இந்த வதந்திக்கு பதிலளித்துள்ளதாக தெரிகிறது.

அதில், 'அமைதியின் அருங்காட்சியகம்' என்று எழுதியிருக்கும் ஆடையை சமந்தா அணிந்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இந்த பதிவு நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தத்திற்கு என்றும், சிலர், இயக்குனரை காதலிப்பதாக பரவிய வதந்திக்கு பதிலடி கொடுக்கும் பதிவு என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில், நாகசைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com