சினிமாவில் பிரேக் எடுத்தது குறித்து சமந்தா உருக்கமான பேச்சு

வெளிப்புறத்தில் இருக்கும் பாதிப்பை குணப்படுத்துவதை விட உள் காயங்களுக்கு மருந்து அளித்து அதிகமாக சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியமானது என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
சினிமாவில் பிரேக் எடுத்தது குறித்து சமந்தா உருக்கமான பேச்சு
Published on

கடந்த சில நாள்களுக்கு முன் மீண்டும் தனது அன்றாட பணிக்கு திரும்புவதாகவும், சினிமாக்களில் நடிக்க இருப்பதாகவும் கூறி ரசிகர்களை இன்பக்கடலில் ஆழ்த்தியுள்ளார் நடிகை சமந்தா.

இதைத்தெடர்ந்து வழக்கம்போல் ஷுட்டிங், நடிப்பு என பிஸியாகியுள்ள சமந்தா பிரபல பத்திரிகை போட்டோஷுட்டில் பங்கேற்றுள்ளார். பல்வேறு கவர்ச்சிகரமான லுக்கில் போட்டோவுக்கு போஸ் கெடுத்திருக்கும் நிலையில், அவை அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

இதுதெடர்பாக பேட்டியளித்த சமந்தா கூறியதாவது:

"மிகவும் கடினமான முடிவாக இருந்தாலும் அந்த நேரத்தில் நான் எடுத்த சரியான முடிவாகவே பார்க்கிறேன். சுய வெறுப்பு, தன்னம்பிக்கை இழந்திருந்த நான் என்னை நானே செதுக்கி கெள்வதற்கான நேரமாக எடுத்துக்கெண்டேன். எனக்கு இப்படியெரு விஷயம் இருப்பதை உணர்ந்ததால் தான் என்னால் அதிலிருந்து குணமடைய முடிந்தது. வெளிப்புறத்தில் இருக்கும் பாதிப்பு, பிரச்னைகளை குணைப்படுத்துவதை காட்டிலும் உள் காயங்களுக்கே அதிக சிகிச்சை தேவை" என்றார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com