

View this post on Instagram
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதித்து சிகிச்சைக்கு பிறகு தேறி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சமந்தா கலந்துரையாடி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
சமந்தா கூறும்போது, "நான் கடுமையாக உழைக்கிறேன். உழைப்பினால் கிடைக்கும் வெற்றிதான் எனக்கு வேண்டும். சம்பள விஷயத்தில் நிர்ப்பந்தம் செய்ய மாட்டேன். தயாரிப்பாளர்கள் தானாக முன்வந்து உங்களுக்கு இவ்வளவு சம்பளம் தருகிறோம் என்று சொல்லி கொடுக்க வேண்டும்.
சம்பளத்துக்காக நான் கெஞ்சக்கூடாது. தீவிர உழைப்புக்கு பலன் கிடைக்கும். எனக்கு ஏற்பட்டுள்ள உடல் நிலை பாதிப்பில் இருந்து மீள்வது கடினமாக உள்ளது. 3 மாதங்கள் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்தேன். மீண்டும் என்னை பழைய நிலைக்கு கொண்டு வர போராடுகிறேன்'' என்றார்.
மேலும் சமந்தா அளித்துள்ள பேட்டியில் "நான் 'குஷி', 'சிட்டாடல்' படங்களில் நடித்த பிறகு எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு நடிப்பில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்க போகிறேன். நல்லபடியாக மீண்டும் நடிக்க விரும்புகிறேன். அதற்காகவே இந்த ஓய்வு. நிச்சயம் மீண்டும் நடிக்க வருவேன்" என்றார்.
View this post on Instagram