சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் புதிய டிரைலர் வெளியீடு

சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தின் புதிய டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் புதிய டிரைலர் வெளியீடு
Published on

சென்னை,

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் ரிலீஸ் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com