சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் படத்தை 3-டியில் மாற்ற உள்ளதாகவும், இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 'சாகுந்தலம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com