2 ஆண்டுகளுக்கு பிறகு...தெலுங்கில் கம்பேக் கொடுக்கும் சமந்தா?

''ஓ பேபி'' படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டியுடன் இணைந்து சமந்தா பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை,
நட்சத்திர நடிகை சமந்தா, சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திகில் நகைச்சுவைத் திரைப்படமான ''சுபம்'' மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
தனது ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் இந்தத் படத்தை தயாரித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு முக்கியமான மற்றும் நகைச்சுவையான கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை சமந்தா 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் மீண்டும் முன்னணி நடிகையாக நடிக்கத் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமந்தாவின் கடைசி வெற்றி படமான ''ஓ பேபி'' (2019) படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டியுடன் இணைந்து அவர் பணியாற்ற திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜபர்தஸ்த் மற்றும் ஓ பேபிக்குப் பிறகு 3-வது முறையாக இருவரும் இணைய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சமந்தா கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியான 'குஷி' படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு, சமந்தா தெலுங்கில் கம்பேக் கொடுக்க இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.






